சரும பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் ஓட்ஸ்
பொதுவாகவே பெண்களுக்கு முகத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசைதான். அதற்காக அவர்கள் தினமும் தங்களின் முகத்தை பராமரித்துக் கொள்ள இயற்கைப் பொருட்கள் அல்லது பியூட்டி பார்லர் மற்றும் பியூட்டிக் கிருமிகளை பயன்படுத்துவார்கள்.
அந்தவகையில் முகத்திற்கும் அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் ஓட்ஸைக் கொண்டு மாஸ்குகளை பயன்படுத்திப் பார்த்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஓட்ஸில் இருக்கும் சபோனின் மூலக்கூறு சருமத்தில் ஆழமாக ஊடுறுவி சுத்தம் செய்யும். மேலும், சரும வறட்சியையும் தடுக்கும். இவ்வாறு பல நன்மைகள் கொண்ட ஓட்ஸில் முகப் பிரச்சினைகளை சரி செய்யலாம்.
சருமத்திற்கு ஓட்ஸ்
ஒரு கப் ஓட்ஸ் உடன் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதில ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பசை போல கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
பொடியாக அரைத்த ஓட்ஸ் ஒரு கப் மற்றும் நன்றாக பழுத்த வாழைப்பழம் இரண்டையும் அரைத்து எடுத்து வெதுவெதுப்பான பாலை கலந்து 20 நிமிடத்திற்கு முகத்திற்கு தடவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |