தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கும் ஓட்ஸ் உப்புமா... வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்!
தொப்பையை வேகமாக குறைக்க உதவும் உணவுகளில் ஓட்ஷ் முக்கிய இடத்தில் உள்ளது.
பலருக்கு காலையில் ஓட்ஸ் சாப்பிட பிடிக்காது. எனினும், மின்னல் வேகத்தில் தொப்பை குறைக்க உடற்பயிற்ச்சியுடன் ஓட்ஸ் உணவு அவசியம்.
ஓட்ஸில் பல்வேறு ரெசிபிகள் செய்யலாம்.
இன்று ஓட்ஸை வைத்து 10 நிமிடத்தில் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் - 1 கப்
- வெங்காயம் - 1
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 3/4 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஓட்ஸை வாணலியில் போட்டு லேசாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் அரை கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
ஓட்ஸானது மென்மையாகும் வரை, மூடி வைத்து வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். இப்போது சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி.