சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் நுவரெலியா பற்றி தெரியுமா?
பொதுவாக விடுமுறை என பார்க்கும் பொழுது இலங்கை தான் முதலில் ஞாபகத்திற்கும் வரும்.
அண்மைக்காலமாக இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதியிலுள்ள மலைக்களும், காலநிலைகளும், மழலை கொஞ்சும் இயற்கை.
இதன்படி, சுற்றுலாவிற்காக நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை, ஹோட்டன் பிலேஸ் உள்ளிட்ட பிரதேசங்களை கூறலாம்.
இது போன்ற இடங்களுக்கு செல்ல முடிந்தளவு போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இலங்கையில் முக்கியமான சுற்றுலாத்தலமாக இருக்கும் நுவரெலியா பற்றி தெரிந்து கொள்வோம்.
1. கிரிகோரி ஏரி
நுவரெலியா சென்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் கிரிகோரி ஏரியும் ஒன்று. இந்த ஏரி 1873 இல் சர் வில்லியம் கிரிகோரி என அழைக்கப்பட்டது. அத்துடன் ஏரிக்கு அருகில் பூங்கா இருக்கின்றது.
சுற்றி பார்க்க வருபவர்களுக்காக வேகப் படகுகள், ஸ்வான் படகுகள், டிங்கி படகுகள், போனி சவாரிகள் என பல வசதிகள் காணப்படுகின்றது. சுற்றுலா பயணிகளின் தேவைகளுக்கேற்ப விடுதிகள் மற்றும் வெளிநாட்டு உணவுகள் என அணைத்து வசதிகளும் நுவரெலியாவில் அதிகமாக காணப்படுகின்றது.
2. விக்டோரியா பூங்கா
நுவரெலியாவின் காணப்படும் பிரபலமான பூங்காக்களில் இந்த பூங்காவும் ஒன்று. பௌத்த நாட்டில் காணப்படும் இந்த மிகப்பெரிய பூங்கா விக்டோரியா மகாராணியின் 60வது ஜூபிலியின் பெயரால் அழைக்கப்படுகின்றது.
விக்டோரியா பூங்காவில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பூக்கள் முழுமையாக பூக்கும் மற்றும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் பூக்கும். இதனால் குழந்தைகளுடன் சுற்றிப் பார்க்க வருபவர்கள் இந்த காலப்பகுதியில் வருவதால் பயனுள்ளதாக இருக்கும்.
3. ஒற்றை மரம் மலை
இந்த மலையின் சிறப்பு என்னவென்றால் சூரிய உதயக் காட்சியை நேராக பார்க்கலாம். கடல் மட்டத்தில் இருந்து 6890 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையின் உச்சியை அடைய சுமார் 90 நிமிடங்கள் ஆகும். மலையை சுற்றி தேயிலை மரங்கள் நிறைந்துள்ளது.
ஆகையால் இங்கு காணப்படும் ஒற்றை மரங்களின் அழகை காண இன்பமாக இருக்கும். இது இலங்கையின் 7வது உயரமான மலை எனவும் கூறப்படுகின்றது.
4. அபெர்டீன் நீர்வீழ்ச்சிகள்
நுவரெலியா மாவட்டத்தின் அழகை இந்த அபெர்டீன் நீர்வீழ்ச்சியில் பார்க்கலாம். இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் போது சிற்றோடைகள், பெரிய பாறைகள் மற்றும் கொடிகளை பார்த்து விட்டு செல்லலாம்.
நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் மூடுபனி சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் ஆடைகளை நனைக்கும், எனவே நீங்கள் சரியான நீச்சலுடைகளை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |