இலங்கையில் பஞ்ச லிங்கங்களை உயிருடன் பாதுகாக்கும் விஷ நாகங்கள்…. எல்லை மீறினால் ஆபத்து? அதிர வைக்கும் மர்மங்கள்
உலகில் அதிசயங்களுக்கு பற்றாக்குறையே இல்லை. தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.
அது மட்டும் இல்லை அதிசயம் எங்கு இருக்கின்றதோ.. அங்கு தான் பல மர்மங்களும் புதைந்து கிடக்கும்.
இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டுதான் இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் டன்சினன் தூவான கங்கை நீர்வீழ்ச்சி. நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா என்ற இடத்தில் டன்சினன் தூவான கங்கை அமைந்துள்ளது.
இந்நீர்வீழ்ச்சியோடு கோவிலொன்றும் இணைந்தே காணப்படுகின்றது.
அக்கோவிலின் பெயர் ஸ்ரீ மீனாட்சி சிவாலயம். இங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்சியின் அழகை ரசித்துவிட்டு கோயில் தரிசனத்தில் ஈடுபட்டு செல்வர்.
இக்கோவில், நீர்வீழ்ச்சியில் பல அதிசயங்களும் மர்மங்களும் நிகழ இங்கு அமைந்திருக்கும் இந்த கோவில் தான் முக்கிய காரணம். கோயிலும் நீர்வீழ்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்தே காணப்படுகின்றது.
குறிப்பாக இந் நீர்வீழ்ச்சியிலிருந்து ஐந்து சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஐந்து லிங்கங்களும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதோடு அந்த சிவலிங்கங்களை நாகங்கள் அடிக்கடி வந்து பாதுகாப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் கோவில் அச்சகர் இல்லாத போது அர்ச்சகர் உருவில் வேறொரு நபர் அர்ச்சகர் உருவில் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூசைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அற்புதத்தை பலமுறை பலர் கூறியதாகவும் அந்த கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இன்றி இங்கு செல்வதாக இருந்தால் பல கட்டுபாடுகளும் இருக்கின்றதாம்.... எல்லை மீறி நடந்து கொள்பவர்களின் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம்.
நாமும் ஒருதடவை தூவான கங்கை எனும் டன்சினன் நீர்வீழ்சியின் அழகை ரசித்து விட்டு கோவில் தரிசனமும் செய்து விட்டு வந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும்.