இலங்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...ஐரோப்பிய நாடாக மாறிய அதிசயம்! வியக்க வைக்கும் புகைப்படம்
இலங்கையில் லிட்டில் லண்டன் என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் பனித்துளிகள் விழுந்து படிந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
ஒவ்வொரு வருடமும் நத்தார் காலப்பகுதியில் நுவரெலியாவில் பனித்துளிகள் விழுவது வழக்கம்.
இந்த முறை சற்று அதிகமாக காணப்படுவதுடன் அது சுற்றுலா பயணிகளின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
நுவரெலியா ப்லெக்பூல் பிரதேசத்தில் மரக்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய இடங்களிலும், தேயிலை தோட்டங்களிலும் பனித்துளிகளை அவதானிக்க முடிந்துள்ளது.
பனித்துளி விழுவதனை தொடர்ந்து நுவரெலியா பிரதேசம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகின்றது.
இந்த காலநிலையால் லிட்டில் லண்டன் என பெயர் கொண்டு அழைக்கப்படும் நுவரெலியா, ஐரோப்பிய நாடுகளை போன்று காட்சியளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.