எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகும் பாசிபயறு! தினமும் சாப்பிடலாமா?
பொதுவாக பருப்பு வகைகளில் அதிகமான ஊட்டசத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை தினமும் எடுத்து கொள்ளலாம்.
இதன்படி, பருப்பு வகைகளில் ஒன்றான பயற்றில் அதிகப்படியான புரதசத்து, நார்சத்து இருக்கின்றது.
இதனால் செரிமானத்துடன் கூடிய பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படுகின்றது. மேலும் பொட்டசியம், எலும்புகளுக்கு தேவையான கால்சியம், மாங்கனீசு போன்ற கனிம தாதுக்களும் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் பயற்றில் இருக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பாசி பயற்றில் ஒழிந்திருக்கும் மருத்துவ வித்தைகள்
1. பாசிப் பயறில் விட்டமின் பி9, பி1, விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து ஆகிய பல ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இது உடல் வளர்ச்சி உட்பட பல பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகின்றது.
2. பாசிப் பயறில் இருக்கும் பேக்டின் நார்ச்சத்து எனும் பதார்த்தம் உணவுகளை சிரமம் இன்றி சமிபாடடைய வைக்கின்றது.
3. ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள், தினமும் ஒரு பவுல் பயறு சாப்பிட வேண்டும்.
4. எடை குறைக்க வேண்டும் நினைப்பவர்களும் இந்த பயற்றை சாப்பிடலாம். காரணம் பயற்றில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் இருக்கின்றது. இது கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுத்து நிறுத்துகின்றது.
5. சருமம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள், பயற்றை காய வைத்து அரைத்து அதனை முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும்.