ஏழைகளின் பாதாம் வேர்க்கடலை! புரதச்சத்து தாறுமாறாக இருக்கும் தெரியுமா?
புரதச்சத்து அள்ளிக் கொடுப்பதில் நிலத்தில் விளையும் வேர்க்கடலை முக்கிய இடத்தில் வகிக்கின்றது.
வேர்க்கடலை
நிலக்கடலை ஃபேபேசீஸ் என்னும் தாவர குடும்பத்தை சேர்ந்த, இவை மல்லாட்டை, கச்சான் என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறது. நிலக்கடலை தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டதுடன், உலகின் பல்வேறு நாடுகளிலும் பயிரிடப்படுகின்றது.
மாமிசங்கள், முட்டை, காய்கறிகளைவிட இந்த வேர்க்கடலையில் அதிக புரதச் சத்து கிடைப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்,.
இந்த வேர்க்கடலை மணலில் வறுத்தும், நீரில் வேகவைத்தும், உணவில் பரிமாறியும் மக்கள் சாப்பிட்டு வரும் நிலையில், இந்த வேர்க்கடலையை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து சாப்பிடும் போது உடலுக்கு நன்மை அதிகம் எனவும் கூறப்படுகிறது.
வேர்க்கடலையில், புரதச்சத்துகள் மட்டுமின்றி, பொட்டாசியம், பாஸ்பரஸ், விட்டமின் பி, மெக்னீசியம் ஆகிய சத்துகளும் உள்ளதாகவும், முக்கிய ஆரோக்கிய தீனியாகவும் இது உள்ளாது.