இரவில் நகம் வெட்டக்கூடாது ஏன்? உண்மையான காரணம் இதோ
இரவு நேரங்களில் ஏன் நகம் வெட்டக்கூடாது என்பதற்கு ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது?
இரவில் நகம் வெட்டக்கூடாது என்பதற்கு ஆன்மீக ரீதியான காரணம் என்னவெனில், மகாலட்சுமியின் வருகையைத் தடுப்பதுடன், நிதி சிக்கல்களை உருவாக்குகின்றது.
மாலை நேரத்தில் தான் மகாலட்சுமி வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகின்றது. ஆதலால் அத்தருணத்தில் நகம் வெட்டினால் வருவது தடைபடும் என்று கூறுகின்றனர். மேலும் தீய சக்திகளால் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
இரவில் கழிவுகளை அகற்றுவது லட்சுமிதேவியை அவமரியாதை செய்வது போன்றதாவதுடன், இதனால் பொருளாதார நெருக்கடியும் ஏற்படும்.
மேலும் இரவில் கடன் கொடுப்பது, நகம் மற்றும் முடி வெட்டுவது, குப்பை கொட்டுவது போன்ற வேலைகளை செய்யக்கூடாது என்று கூறுகின்றனர்.
image: istockphoto
மேலும் பில்லி சூனியம் போன்ற தீய செயல்களுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பொருள் ஒருவரது தலைமுடி, அணியும் சட்டை, முடி ஆகும்.
எனவே இரவில் நகங்கள் தரையில் விழுந்தால் தீங்கு நினைப்பவர்கள் சேகரித்து நமக்கு தீமை வருவதற்கு இம்மாதிரியான மாந்தீரிகத்தினை செய்து வைப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.
image: canva
ஆனால் அறிவியல் காரணம் என்னவெனில் இரவில் நகம் வெட்டினால், நாம் சாப்பிடும் உணவுகளில் விழுந்துவிடும். இவற்றினை கவனிக்காமல் நாம் சாப்பிடும் போது பல உடல்நல பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதே உண்மையாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |