இனிமே சிரிக்க தடை.. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு
வடகொரியா அரசு எப்பொழுதுமே அந்நாட்டு மக்களுக்கு வித்தியாசமான தண்டனைகள் கொடுப்பது வழக்கம்.
இதனிடையே, அதிபர் கிம் ஜாங் உன்-இன் தந்தை கிம் ஜாங் இல்-இன் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அந்நாட்டு மக்களுக்கு அவருக்காக அஞ்சலி செலுத்தும் விதமாக மக்களுக்கு புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் படி வடகொரியாவில் வாழும் மக்கள் யாரும் அடுத்த 10 நாட்களுக்கு மது அருந்த கூடாது, சிரிக்க கூடாது, கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க கூடாது, பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபட கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் எல்லை நகரமான சினுய்ஜூவில் வசிக்கும் நபர் ஒருவர் ‘ரேடியோ ஃப்ரீ ஏசியா’விடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கிம் ஜாங் இல்-இன் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளாதம் வடகொரிய அரசு.