ஒரே ஒரு மாம்பளத்தின் விலை 1000 ரூபாயா? அப்படியென்ன மாம்பளம்னு நீங்களே பாருங்க
மத்திய பிரதேச மாநிலத்தில் விளையும் நூர்ஜகான் எனப்படும் அரியவகை மாம்பழம் ஒன்றின் விலை ரூ.1000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை மாம்பழம் மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ் மாவட்டம் கத்திவாடா பகுதியில் பிரத்யேகமாக விளைவிக்கப்படுகிறது. இந்த மாம்பழம் ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்டது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
வழக்கமாக ஜூன் மாதத்தில் விளையும் நூர்ஜகான் மாம்பழம் இந்த ஆண்டு அதிக அளவில் விளைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இப்பகுதியில் 3 வகையான மா மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் இருந்து இந்த ஆண்டு மட்டும் 250 பழங்கள் விளைந்துள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு மாம்பழத்தின் எடை 2 முதல் 3.5 கிலோ வரை இருக்கும்.
இதுகுறித்து விவசாயி சிவராஜ் சிங் கூறுகையில், “கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாம்பழங்கள் அதிக அளவில் விளைந்துள்ளது. மாம்பழங்கலி வாங்க வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே ஆன்லைன் மற்றும் தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.
ஒரு மாம்பழத்தின் விலை ரூ.500 முதல் ரூ.1000 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பருவ நிலை சிறப்பாக இருந்ததால் விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால் விற்பனை குறைந்துள்ளது” என தெரிவித்தார்.