இந்தியாவில் எந்த இடங்களில் அசைவம் சாப்பிட முடியாது? சுற்றுலா பயணிகளே இதோ லிஸ்ட்
இந்தியாவில் கோவில்களின் நகரமாக பார்க்கப்படும் சில இடங்களில் அசைவ உணவுகளை நீங்கள் சாப்பிடமுடியாது அது எந்த இடம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் உள்ள நிலையில், தினசரி உணவு, ஆடை அணிவது என ஒவ்வொன்றும் மாறுபடுகின்றது.
ஆனால் ஒரு சில நகரங்களில் அசைவ உணவை உங்களால் சாப்பிட முடியாது. இந்தியாவில் கிட்டத்தட்ட 40% மக்கள் சைவ உணவு உண்பவர்களாக உள்ளனர்.
ஆனால் நாம் பயணிக்கும் இடங்கள் அனைத்திலும் அசைவ உணவு கிடைக்கும் என்று தவறாக நினைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் அசைவ உணவு சாப்பிட முடியாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவம் சாப்பிட முடியாத நகரம்
குஜராத் மாநிலத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பலிதானா என்ற நகரத்தில் பழமைவாய்ந்த புகழ்பெற்ற கோவில்கள் உள்ள நிலையில், இங்குள்ள மக்கள் சமண மதத்தை பின்பற்றுகின்றனர். இங்கு சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். அசைவ உணவுகள் இங்கு கிடைக்காது.
கிருஷ்ணர் வாழ்ந்த விருந்தாவனம் மற்றும் மதுராவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சைவ உணவு மட்டும் விற்பனை செய்யும் நிலையில், அசைவ உணவு இங்கு கிடைப்பது இல்லையாம்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான நகரமான ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் பழமைவாய்ந்து கோவில்கள் அதிகமாக உள்ளது. இங்கு மக்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்யும் இடங்கள் அதிகளவில் உள்ளதால், இங்கு முழுவதும் அசைவ உணவுகள் கிடைக்காது.
இந்தியாவை தாண்டி உலகெங்கிலும் உள்ள சிவன் பக்தர்கள் வருகை தரும் வாரணாசியில், அழகிய மலைகள் மற்றும் ஆறுகள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக இருக்கின்றது. ஆனால் இங்கு அசைவ உணவுகளை பார்க்கவே முடியாதாம்.
இதே போன்று தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மதுரை, கும்பகோணம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் போன்ற இடங்கள் கோவில்களின் நகரமாக பார்க்கப்படுவதால், சைவ உணவகங்கள் தான் அதிகமாக இங்கு காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |