நிஜத்தில் கோடீஸ்வரியாக வாழும் நித்யா மேனன்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தலைவன் தலைவி திரைப்படத்தில் பேரரசியாக கலக்கியிருக்கும் நடிகை நித்யா மேனனின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை நித்தியா மேனன்
குழந்தைப் பருவத்தில் முதல் மலையாள படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை நித்தியா மேனன்.
இவர், கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த ஆகாஷ கோபுரம் என்கிற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழில் வெளியான வெப்பம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். சவாலான கதாபாத்திரங்களை ஏற்று, யதார்த்தமாக நடிக்கும் நாயகியாக வலம் வருகிறார். அத்துடன் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கும் தலைவன் தலைவி படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
நித்யா மேனன் சொத்து மதிப்பு
இதற்கிடையில் உச்ச நாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை நித்யா மேனனின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, நித்தியா மேனனின் சொத்து மதிப்பு ரூ.50 முதல் 55 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.3 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நித்தியாமேனன் நடிப்பில் அடுத்ததால் இட்லி கடை என்கிற திரைப்படம் வெளியாகவுள்ளது. தனுஷும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை காண்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |