மாட்டு சாணம் அள்ளிய கைக்கு தேசிய விருது! நடிகை நித்யா மேனன் ஓபன் டோக்
நடிகை நித்யா மேனன் மாட்டு சாணம் அள்ளிய கைக்கு தேசிய விருது கிடைத்தது என தனது சினிமா அனுவங்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
நித்யா மேனன்
தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன்.
அதனை தொடர்ந்து வெப்பம், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, மெர்சல், திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
நடிகை நித்யா மேனன் நடிப்பு திறமைக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் படங்களில் சின்ன ரோலில் நடித்தால் கூட அதற்கு பாராட்டுகளும் குவிகிறது.
தற்போது தனுஷுடன் இணைந்து இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தலைவன் தலைவி படத்தில் நடித்துள்ளார். தலைவன் தலைவி திரைப்படம் கடந்த 25 ஆம் திகதி வெளியாகி வெற்றிநடை போட்டு வருகின்றது.
ஓபன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நித்யா மேனன் பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனுஷ் உடன் இட்லி கடை படத்தில் நடித்த அனுபவம் பற்றி நித்யா மேனன் பேசி இருக்கிறார்.
அவர் குறிப்பிடுகையில் , இந்தப் படத்தில் முதன்முறையாக நான் என் கைகளால் மாட்டு சாணத்தை எடுத்தேன். இது எனக்கு புதுமையான அனுபவம்.
தேசிய விருதைப் பெறும் நாளுக்கு முந்தைய நாள் அந்த காட்சியை நடித்தேன். விருதைப் பெறும் தருணத்தில் என் நகங்களில் மாட்டு சாணம் இருந்தது. அது எனக்கு விருதை கைகளில் ஏந்தும் போது நினைவாகவும் உள்ளது” என்றார்.
‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷுடன் நடித்த நித்யா மேனன், சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |