திருமணத்தின் போது நீதா அம்பானி எப்படி இருக்கிறார் பாருங்க.. அவரே போட்ட பதிவு
நீதா, முகேஷ் அம்பானியின் திருமணம் செய்யும் பொழுது எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நீதா அம்பானி
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் தான் முகேஷ் அம்பானி.
இவர், அவருடைய அப்பாவின் ஆசைப்படி நீதா அம்பானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முகேஷ் அம்பானியின் காதல் மனைவியாக இருக்கும் நீதா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைமையிலான பாரம்பரிய இந்திய கைவினைப் பொருட்களைப் பாதுகாக்கும் புதிய முயற்சி தொடர்பில் அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
மும்பையில் முதன்மையான ஸ்வதேஷ் கடை தொடங்குவதற்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையின் காணொளியும் வெளியாகியுள்ளது.
பூஜையில் நீதா அம்பானி, கைவினைஞரால் 10 மாதங்களுக்கும் மேலாக கையால் நெய்யப்பட்ட, அழகிய மதுரை பருத்தி கர்சோலா சேலையில் போர்த்தப்பட்டு மங்களகரமாக கலந்து கொண்டார்.
தங்க பஜூபந்த் ஆபரணம் பரிமாற்றம்
நீதா அம்பானி அணிந்திருந்த பரம்பரை தங்க பஜூபந்த், அவருடைய தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் ஒரு அன்பான குடும்ப ஆபரணமாக பார்க்கப்படுகிறது. இதனை எடுத்துக் காட்டும் வகையில், நிதா மற்றும் முகேஷ் அம்பானியின் பழைய திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நீதா அம்பானி திருமணத்திலும் அதே ஆடையை தான் அணிந்திருக்கிறார். பரம்பரையாக அணிந்து வரும் ஆபரணங்கள் அலங்காரம் மட்டுமல்ல, ஒரு தலைமுறை பெண்களிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு பாயும் மரபு, அன்பு மற்றும் நீடித்த வலிமை சின்னமாக பார்க்கப்படுகிறது.
அவர்கள் குடும்பத்தை சார்ந்த பெரியவர்களின் கருணை, ஞானம் மற்றும் ஆசீர்வாதங்களை அதனுடன் சுமந்து செல்லப்படுகிறது. அதே கவசம் தற்போது இஷாவிற்கும் பின்னர் அவரது விலைமதிப்பற்ற பேத்தி ஆதியாசக்திக்கும் செல்லும் என்றும் சொல்லப்படுகிறது.
சுதேசிக் கடையின் வரவிருக்கும் தொடக்க விழா பூஜையில், நீதா அம்பானி, அவரது ஒரே மகள் இஷா அம்பானி - பஜுபந்த் உரிமையைப் பெறப் போகிறார். இதனை சிறப்பிக்கும் வகையில், இரண்டு மருமகள்களான ஸ்லோகா மற்றும் ராதிகா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |