எப்படி இருந்தா நா இப்படி ஆகிட்டேன்: ஆனந்த் அம்பானியின் முந்தைய புகைப்படத்தை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்!
ஆனந்த் அம்பானியின் முந்தைய புகைப்படத்தைப் பார்த்து விட்டு இவரா அவர் என ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
உடல் எடை அதிகரிப்பென்பது தற்போது பொதுவான விடயமாகி விட்டது. உணவுப்பழக்க வழக்கம், உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமல் போன்ற பல காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. இந்த உடல் எடை பிரச்சினையால் அம்பானி குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் அம்பானி
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் தான் ஆனந்த அம்பானி. முன்னதாக இவரின் உடல் எடை 108கிலோவாக இருந்துள்ளது. அதற்கு முன்னரும் அவர் இன்னும் மிகவும் குறைந்த உடல் எடையை கொண்டிருந்திருக்கிறார்.
அண்மையில் கூட ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பெரிய பெரிய தொழிலதிபர் மற்றும் திரைப் பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடல் எடை அதிகரிப்பு
ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கலந்துக்கொண்ட பலரும் அவரின் உடல் எடை அதிகம் பேசப்பட்ட விடயமாக மாறியிருந்தது.
மேலும், ஆனந்த அம்பானியின் உடல் எடை அதிகரிப்பு தொடர்பில் நீதா அம்பானி முன்னதாகவே நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது,
ஆனந்த் ஆஸ்துமா நோயாளியாக இருந்ததால், நாங்கள் அவருக்கு நிறைய ஸ்டெராய்டுகளைப் போட வேண்டியிருந்தது. அதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட சிகிச்சை காரணமாகவே, ஆனந்த் அம்பானி உடல் பருமனால் அதிகரித்ததாகவும், அதிகப்படியான எடை என்று சொல்லகூடிய 208 கிலோ அளவு எடையுடன் இருந்தார் எனவும் கூறியிருந்தார்.
மேலும், நாங்கள் இன்னும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுகிறோம். ஆனந்த் அம்பானியை போன்ற உடல் பருமனை கொண்டு பல குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் அவர்களது தாய்மார்கள் அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். உங்கள் பிள்ளையின் உடல் எடையை குறைக்க நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் குழந்தை எப்போதும் நம்மை பார்த்துதான் வளர்கிறது என்று கூறியிருந்தார்.
எடை குறைத்தது எப்படி?
தனது உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டார். அவர் தனது 21 வயதுக்குள் உடல் எடையைக் குறைத்தாக வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார்.
தினமும் 21 கிலோமீட்டர் வரை நடைபயணம், நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் 6 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது. யோகா, சரியான நேரத்தில் உணவு எடுப்பது.
குறிப்பாக கொழுப்புச்சத்து இல்லாத உணவு வகைகள் எடுப்பது, பளுதூக்குதல், கார்டியோ பயிற்சி வரை ஈடுபட்டு தனது எடை இழப்பு இலக்கை அடைந்தார்.
இவரது கடுமையான உழைப்புக்கு பலன் கிடைத்தது. 18 மாதங்கள் தீவிர பயிற்சிக்கு பிறகு 108 கிலோவை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்பட செய்தார்.