ஒரு நிமிடத்தில் இப்படியும் உலக சாதனை பண்ணமுடியுமா?
சில சாதனைகளெல்லாம் ஒவ்வொருவரின் தனித்திறமையும் கொண்டிருக்கும். வித்தியாசமான, விநோதமான செயல்களிலும், வழிகளிலும் உலக சாதனை புரிந்தவர்கள் பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம்.
அவ்வாறு உலக அளவில் சாதனைப்புரியும் சாதனையாளர்களுக்காக கின்னஸ் நிர்வாகம் அங்கீகரித்து அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் டி-ஷர்ட்டை மடித்தே கின்னஸ் சாதனை படைத்த நபரை பற்றி கேள்விப்பட்டதுண்டா?
கின்னஸ் சாதனை
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த டேவிட் ரஷ் STEM (Science, Technology Engineering, and Mathematics) என்பதை ஊக்குவிக்கும் விதமாக பல சாதனைகளை புரிந்தும், முறியடித்தும் வருகிறார்.
இவர் டி-ஷர்ட்டை மடித்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அதன்படி ஒரு நிமிடத்திற்குள் எத்தனை டி-ஷர்ட்களை மடிக்க முடியும் என்பதை செய்து காட்டி அதில் உலக சாதனை படைத்திருக்கிறார்.
அதில் ஒரு நிமிடத்திற்குள் 31 டி-ஷர்ட்களை மடித்து சாதனை புரிந்ததோடு, இதற்கு முன் 23 டி-ஷர்ட்களை மடித்து காட்டிய அவரது சாதனையே டேவிட் முறியடித்திருக்கிறார்.
250 கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்
இதற்கு முன்னதாக டேவிட் ரஷ் 250 கின்னஸ் உலக சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்திருக்கிறார்.
அதில் மாரத்தான் போட்டிகளில் பாதி வழியில் போய்க் கொண்டிருக்கும் போது 111 டி-ஷர்ட்களை அணிவது, தாடையில் கிட்டாரை வைத்தபடியே மாரத்தான் ஓடுவது, வாயில் வைத்துக் கொண்டு 150 மெழுகுவர்த்திகளை வெகு நேரத்திற்கு ஏற்றுவது என பல நூதனமான சாதனைகளை படைத்து 250 கின்னஸ் சாதனைகளுக்கு சொத்தக்காரர் ஆகியுள்ளார்.
வெறும் டி-ஷர்ட்டை வைத்து இவ்வளவு சாதனைகளை செய்ய முடியுமா என பார்ப்போர்களை வாய்ப்பிளந்து விட்டார்கள்.