பாலாவை வாழ்த்த நிரூப் கூறிய ஒற்றை வார்த்தை! பொறாமையின் உச்சமா? வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் வின்னரான பாலாவை வாழ்த்தி நிரூப் பதிவிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல் இடத்தை பிடித்த பாலாஜி :
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.
இதில் வின்னராக பாலாவும், முதல் ரன்னராக நிரூப்பும் இடத்தினை பிடித்தனர். ஜுலி அல்லது தாமரை இருவரில் ஒருவர் இரண்டாம் இடத்தினை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.
ஜுலிக்கு I Love You கூறிய பிக்பாஸ் பிரபலம்! ட்ரண்டாகும் புகைப்படம்
பாலாஜிக்கு வாழ்த்து சொன்ன நிரூப் :
இப்படி ஒரு நிலையில் வெற்றி பெற்ற பாலாஜிக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்த நிரூப், பாலாஜிக்கு வாழ்த்து கூறி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில், பிக் பாஸ் கோப்பையை claiming செய்ததர்க்கு வாழ்த்துக்கள் பாலாஜி என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பாலாஜி ‘அது வெற்றி (Winning) டா’ என்று Thug பதிலை கொடுத்து இருக்கிறார். இந்த பதிவால் தற்போது பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் நிரூப்.
Congratulations @OfficialBalaji on claiming the BBU trophy.#BiggBossUltimate #BalajiMurugadoss #NiroopNandakumar
— Niroop Nandakumar (@NiroopNK) April 11, 2022
நிரூப்பின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாலாஜி வெற்றி பெற்றது நிரூப்பிற்கு பொறாமை. அதனால் தான் அவர் வெற்றி என்று சொல்லாமல் ‘Claim’ என்று சொல்லி இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். மேலும், சிலரோ Claiming என்ற வார்த்தை என்ன அர்த்தம் என்பதை எல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் நிரூப் தான் எந்த அர்த்தத்தில் கூறியுள்ளதாக மீண்டும் ஒரு ட்விட்டினை பதிவிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். ஆனாலும் ரசிகர்கள் கொந்தளிப்பு அடங்காமல் இருந்து வருகின்றது.
These days any thing said good can also be made to look the worst as possible. Claim by dictionary means "to take as the rightfull owner" ? I'll try approaching Oxford and Merriam-Webster to give it a different meaning so as to give anyone who wants to abuse me a chance.
— Niroop Nandakumar (@NiroopNK) April 12, 2022
பாலாஜி மற்றும் நிரூப் இருவருமே பிக் பாஸ் வருவதற்கு முன்பே நண்பர்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டு தான் இருந்தது.
அதிலும் குறிப்பாக நிரூப்பின் முன்னாள் காதலியான அபிராமியிடம் பாலாஜி நெருக்கம் காட்டி வந்தது நிரூபிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இது குறித்து பல முறை பலரிடமும் புலம்பி இருந்தார் நிரூப்