அனிதா பெட்டியில் நிரூப் வைத்து அனுப்பிய பரிசு! இவ்வளவு விலையா?
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அனிதாவின் சூட்கேஸில் நிரூப் வைத்த பரிசு பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர்.
பின்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷ், ரம்யா இருவரும் உள்ளே சென்றனர். அதன்பின்பு சாண்டி மற்றும் தீனா இருவரும் உள்ளே சில தினங்கள் மட்டும் இருந்து கொமடி செய்து மக்களை மகிழ்வித்தனர்.
தற்போது ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி என ஆறு போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் வீ்ட்டிற்குள் இருக்கின்றனர்.
பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் கிரீன் டீ! எந்தெந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது தெரியுமா?
அனிதாவிற்கு நிரூப்பின் பரிசு
இந்நிலையில் வெளியே சென்ற போட்டியாளர்களில் அனிதா, ஷாரிக் இருவரும் மீண்டும் உள்ளே வந்துள்ளனர்.
அப்போது இதுவரை யாருக்கும் தெரியாத விடயம் அனிதாவின் மூலம் தெரியவந்துள்ளது. ஆம் அனிதா வீட்டிற்கு செல்லும் முன்பு நிரூப் அனிதாவின் பெட்டியில் பரிசு ஒன்றினை அவருக்கே தெரியாமல் வைத்துள்ளார்.
விலையுயர்ந்த வாசணை திரவியத்தினை பரிசாக வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் விலை 8 ஆயிரம் ரூபாய் என்றதும் தாமரை அதிர்ச்சியிலிருந்து மீளாமல் புலம்பிக்கொண்டிருக்கும் காட்சியை காணலாம்.