இரவில் தூங்காமல் இருக்கிறீர்களா? மாரடைப்பு ஏற்படும் ஜாக்கிரதை
தூக்கம் என்பது மனிதரின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாகும். ஆனால் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பலரும் தூக்கத்தினை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் சரியான நேரத்தில் தூங்காமல் இருக்கும் நபர்கள் பல பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை நாம் மறந்து விட வேண்டாம். இங்கு தூக்கத்தினை குறித்த விளக்கத்தினை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
தூக்கத்தின் முக்கியத்துவம்
நமது தூக்கம் சரியாக இல்லாவிடில், நாள் முழுவதும் சோர்வு, கவனமின்மை, பதட்டம், மனச்சோர்வு, உயர் ரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு பிரச்சினை ஏற்படுகின்றது.
மேலும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவதுடன், அடிக்கடி அதிக பசி எடுக்கும். இம்மாதிரியான எதிர்மறை விளைவுகள் மாரடைப்பு, பக்கவாதம், இதய பிரச்சினையை ஏற்படுத்தும்.
துக்கம் இல்லாமலும், சரியான உணவு பழக்கங்கள் இல்லாத நபர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் உயிரிழப்பு ஏற்படலாம்.
உடல் பருமனை அதிகரிக்கும் தூக்கமின்மை, கொலஸ்ட்ராலையும் அதிகரிப்பதால் இதயம் தொடர்பான பிரச்சினையும் ஏற்படுகின்றது.
ஒரு நபரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சராசரியாக 7 முதல் 8 மணி நேர நல்ல தூக்கம் தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.