இரவில் நெஞ்செரிச்சலால் அவதியா? உயிரையும் பறிக்கும்... அலட்சியப்படுத்தாதீங்க
இரவு நேரத்தில் நெஞ்செரித்தல் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு என்ன தீர்வு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெஞ்செரிச்சல்
அஜீரணம், வயிற்று பிரச்சினை போன்றவற்றால் நெஞ்செரிச்சல் ஏற்படுகின்றது. இதய கோளாறு இருந்தாலும் இரவில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கத்தை பாதிப்பதுடன், உயிருக்கே ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.
இரைப்பை அமிலம் உணவுக் குழாயில் திரும்புவதால் இவ்வாறு இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுகின்றது. இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சோர்வு மற்றும் நாள்பட்ட உடல்நல பிரச்சினை காணப்பட்டாலும் நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படுமாம்.
image: Shutterstock.com
காரணம் என்ன?
நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் தூங்கும் நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதும், சாப்பிட்ட உடனே தூங்குவதும் முக்கிய காரணமாகும். இதனால் அமிலம் மீண்டும் உணவு குழாயில் பாய்கிறது.
சில உணவுகள் கூட இதற்கு காரணம், அதாவது பானங்கள், காரமான உணவுகள், கொழுப்பு உணவுகள், காஃபின், ஆல்கஹால் மற்றும் சாக்லேட் போன்றவையாகும்.
image: istock
பிரச்சனையை போக்க என்ன செய்யலாம்?
சரியான உடலமைப்பில் தூங்குவது அவசியம் ஆகும். வலது பக்கமாக பார்த்து தூங்குவது நெஞ்செரிச்சலை இன்னும் மோசமாக்குமாம். எனவே இடது பக்கம் தூங்குவது நல்லது. மேலும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக அதிக கொழுப்புள்ள உணவுகளை இரவில் சாப்பிடக்கூடுாது. தூங்க செல்வதற்கு சுமார் 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பு உணவை சாப்பிட்டு முடிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் எளிதில் உணவு ஜீரணமாகுமாம். மேலும் தக்காளி, சிட்ரஸ் பழங்கள், பூண்டு, காரமான உணவுகள், வெங்காயம் இவற்றினை தவிர்க்கவும்.
இரவில் காபி, டீ மற்றும் காஃபின், மது, குளிர்பானங்கள் இவற்றினை தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தமும் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். நீங்கள் சில சுவாச பயிற்சிகள், தியானம், யோகா செய்வதன் மூலம் குறைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |