உயிரை காவு வாங்கும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்
டெங்கு வைரசால் பாதிக்கப்பட்ட நுளம்புகளால் பரவக்கூடிய நோய் டெங்கு, ஈடிஸ் எனும் நுளம்பினால் வருகின்றது.
பெரும்பாலும் மழைக்காலத்தில் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பரவும் இந்நோய், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கின்றது.
இந்த நோய் வந்தால் உடலில் என்னென்ன அறிகுறிகள் காட்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
டெங்கு நோய்
உலகளாவிய ரீதியில் ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க நாம் நல்ல நீர் தேங்கி நிற்காமல் பாதுகாக்க வேண்டும்.
பொதுவாக இந்த நோயை உண்டாக்கும் நுளம்புகள் நன்னீரில் தான் உண்டாகும். இது மாலை நேரங்களில் கடிக்கக்கூடியவை. இந்த நுளம்புகள் வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகளை கொண்டு காணப்படும்.
இதன் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க மாலை நேரங்களில் நமது குழந்தைகளுக்கு கிரீம்களை உடலில் தடவ வேண்டும். இது கொசுக்கடியில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
இந்த நோய் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் பெற்றோர்கள் சில விஷயத்தில் கவனம் கொள்வது முக்கியம். போதுமானவரை குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பது நல்லது.
இது வைரஸால் வரும் ஒரு நோய் இதற்கு நேரடி மருந்து கிடைக்காது என்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்து கொள்வதே பல மரணங்களை தவிர்க்க உதவும். காய்ச்சலின் போது திட ஆகாரம் எதுவும் உண்ண கூடாது.
இளநீர், பால், பழச்சாறு, கஞ்சி தண்ணீர் என எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
இந்த நோய் பற்றி மருத்துவர் விளக்கும் போது அவர் சில வியங்களை குறிப்பிட்டு இருந்தார். சாதாரணமாக நமக்கு வரும் உடல் வலியை விட அதிக உடல் வலியுடனும் அதிக காய்ச்சலுடனும் இருப்பது தான் டெங்குவின் முதல் அறிகுறி.
வீட்டில் யாருக்கும் காய்ச்சல் இல்லாமல் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் இந்த காய்ச்சல் வரக்கூடும். இந்த காய்ச்சலின் போது சளி, இருமல், தும்மல் என எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இந்த நோய் வரும்.
தொடர்ந்து இந்த காய்ச்சல் 48 மணிநேரம் குறையாமல் அப்படியே இருக்கும். அப்படி இருப்பதை நீங்கள் அறிந்தால் தாமதமின்றி ரத்த பரிசோதனை எடுப்பது நல்லது. இதை அப்படியே விட்டால் உயிருக்கே ஆபத்து நேரும்.
மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. இந்த நோய்க்கு சில ஆரம்ப அறிகுறிகள் காட்டும். உடல் எப்போதும் இல்லாமல் அதிக சோர்வாக காணப்படும். படுக்கையில் இருந்து எழும்ப முடியாத அளவிற்கு உடல் அதிக வலி ஏற்படும்.
இதனால் இரவு பகல் என எப்போதும் உறக்கம் வராது. உடலின் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.
சாதாரணமாக நம்மை வாட்டும் தலைவலி போல வராது. இந்த நேரத்தில் வரும் தலைவலி மிகவும் அதிகமாக இருக்கும். இதை உணர்வது மிகவும் கொடுமையானதொன்று.
ஒவ்வொரு எலும்புகள் சேரும் இடத்திலும் அதாவது கால்கள், அதனுடன் மூட்டுகளில் கைகளின் மூட்டுகளில் வலி அதிகமாக காணப்படும். முகங்கள் வழமை அற்று வீக்கத்துடன் காணப்படும்.
கண்களில் வீக்கம் காணப்படும். இது கண்களை சிவப்பாக காட்டும். இப்படி வீங்கி சிவப்பாக தென்படும் எல்லா இடத்திலும் அரிப்பு ஏற்படும். இதனால் பல அசௌகரியங்களை இது உண்டாக்கும். ஆனால் இப்படி அரிப்பு ஏற்படும் போது நீங்கள் அந்த இடத்தை சொரிய கூடாது. அப்படி சொரிந்தால் அது இன்னும் வீக்கத்தை கூட்டும்.
இது இந்த டெங்கு நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருந்தாலும் உடலில் பிளேட் லெட் குறைதல் தீவிரமானதாகும். இது ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.
இந்த எண்ணிக்கையை குறையவிடாமல் பாதுகாப்பதற்கு இதன் ஆரம்ப அறிகுறிகளின் போதே நாம் சிகிச்சை பெறுவது நன்மை தரும். இப்படி செய்தால் மட்டுமே இந்த எண்ணிக்கை குறையாமல் உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |