இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திடுங்க! பாரிய விளைவை சந்திப்பீங்க
பொதுவாக காலை அரசன் போல், மதியம் மந்திரி போல், இரவு யாசகன் போல் சாப்பிட வேண்டுமென்று பழமொழி உள்ளது. இரவு நேரத்தில் அளவு குறைவாகவே சாப்பிட வேண்டுமாம். ஆடம்பரமாக சாப்பிடக்கூடாதாம்.
பொதுவாக, இரவு எட்டு மணிக்குள் சாப்பிடுபவர்களின் உடல் நலம் சீரான ஆரோக்கியத்திற்குள் இருப்பதாகவும், செரிமானமும் சீராக நடைபெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும் சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது.
இறைச்சி:
இரவு நேரத்தில் மாமிச உணவுகளை சாப்பிட்டால் செரிமானம் மெதுவாக நிகழும். உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அது குறைத்துவிடும்.
மேலும் உடல் உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தவும் செய்யும். இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக்கத்தை விட குறட்டை சத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துவார்கள்.
இதனால் அவருடன் உறங்குபவர்களுக்கும் அது பிரச்னை. எனவே இறைச்சி உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

ஐஸ்கிரீம்:
ஐஸ்க்ரீம் எப்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்களைவரை விரும்பப்படும் உணவு. இரவு விருந்துக்கு செல்பவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமை விரும்பி ருசிக்கும் வழக்கம் பரவலாக நடைமுறையில் இருக்கிறது.
அதில் அதிக அளவு கொழுப்பும், சர்க்கரையும் கலந்திருப்பதால், உடல் எடை அதிகரித்து, உடலுக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்துமாம்.

சாக்லேட்:
சாக்லேட்டில் இருக்கும் காபினும், ஊட்டச்சத்துக்களும் இதயத்திற்கு நலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.
பாஸ்தா:
பசியுடன் இருக்கும் சமயத்தில் பாஸ்தா சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை சேர்க்கும். ஆனால் இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடுவதுடன், உடல் எடை அதிகரிக்கின்றது. உடலில் கார்போஹைட்ரேட் அளவை உயர்த்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
