இரவில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என எல்லோரது கைகளிலும் ஸ்மார்ட்போன் காணப்படுகின்றது.
இப்பதுத இருக்கும் தொழிநுட்பவளர்ச்சி காரணமாக மனிதன் அவனுடைய வேலைகளை இலகுவாக்க ஸ்மார்ட்போன் களை பயன்படுத்துகிறான்.
ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களை இரவில் அதிகமாக பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்
இரவில் உறங்கும் முன் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் போனில் இருந்து வரும் ப்ளு லைட் உறக்கத்தை ஏற்படுத்தும் மெலனின் எனும் உற்பத்தியை குறைக்கிறது.
இதனால் உறக்கம் சீர்குலைந்து மூளைக்கு ஓய்வு கிடைக்காமல் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். இரவில் உறக்கம் இல்லாதவர்கள் பலதையும் யோசிப்பார்கள்.
இதனால் இயல்பாக மனிதனுக்கு மன அழுத்தம் உண்டாகும். இதனால் அதிக கவலை மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் வரும்.
இரவில் உறங்குவதற்கு தாமதமாகினால் அதிகாலை எழுவது மிகவும் கடினம். இதனால் நீங்கள் நாளைய நாளுக்காக வைத்திருந்த திட்டம் அனைத்தும் வீணாகி விடும்.
கண்கள் உறக்கத்தை இழப்பதால் கண் வறட்சி, கண் சோர்வு மற்றும் பார்வை மங்கல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
இத்தகைய சிக்கல்கள் உங்கள் பார்வை ஆரோக்கியத்தை பாதித்து, நீண்ட கால கண் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |