நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு ஓமிக்ரோன் தொற்று பாதிப்பா?
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த நபர் ஒருவருக்கு ஓமிக்ரோன் இருக்கலாம் என சந்தேகிப்படுகிறது.
ஓமிக்ரோன் வைரஸ் ஆனது உலக நாடுகள் எங்கிலும் பரவத்தொடங்கி இருக்கிறது. அதன்படி நைஜீரியாவை கொரோனா ஆபத்தில்லா நாடு என அங்கிருந்து வருவபவர்களுக்கு ஆர் டி பிசி பரிசோதனை செய்யப்படாது. விமான பயணிகளிலும் 2% பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.
இதனடிப்படையில் ஒரு நாட்டிலிருந்து புறப்படாமல் நேரடியாக வேறு நாடுகள் வழியாக பயணித்து வந்தாலும் அவர்களுக்கு முன்னூரிமை மாதிரிகள் எடுக்கப்படும். அதன்படி, 10-ம் திகதியில் வந்த இந்த நபரின் மாதிரி சென்னைவிமான நிலையத்தி எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் ஆபத்தில்லா நாட்டிலிருந்து வந்ததால் முடிவுகள் வரும் வரை விமான நிலையத்திலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே மாதிரி எடுக்கப்பட்டவுடன் அவர் சென்னையில் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், 3 மணி நேரத்திற்கு பின்பு வந்த முடிவுகளின் படி அவருக்கு கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. இதனால் கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்த போது அதில் S gene drop கண்டறியப்பட்டது. S gene drop என்றால் இது வரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகள் அல்லாமல் வேறு கொரோனாவாகா இருக்கலாம் என்று அர்த்தம்.
இதனைத்தொடர்ந்து, 7 பேரில் 2 ஆண்கள் 5 பெண்கள் உள்ளனர். 3 மணி நேரத்தில் 6 பேருக்கு தோற்று பரவி உள்ளதால் இது உண்மைதான் பாதிப்பாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால்ம் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.