பயனர்களை ஈர்க்க புது பிளான் போட்ட WhatsApp- அதிரடியாக கொடுத்த புது அப்டேட்
வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாரம் ஒரு அப்டேட்டை வழங்கி வருகின்றது.
பீட்டா வெர்ஷன் (Beta Version) அறிமுகப்படுத்தும் அம்சங்கள் அனைத்தும் பயனர்களின் தேவைகளை பொருத்து தான்.
இவ்வாறு அறிமுகமாக சில அப்டேட்கள் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அப்படி வாட்ஸ்அப் செய்த அப்டேட் தான் வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ் (WhatsApp Favorites).
அந்த வகையில் WhatsApp Favorites தொடர்பில் தொடர்ந்து பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
WhatsApp Favorites
- WhatsApp Favorites அம்சத்தை பயன்படுத்த நினைப்பவர்கள் App Settings வழியாக சென்று நிர்வகிக்கலாம்.
- எந்த நேரத்திலும் அவற்றை Reorder செய்யலாம் என்றும் WhatsApp தெரிவித்துள்ளது.
- WhatsApp Favorites அம்சம் அனைத்து சாட்களிலும் வேலை செய்யும்.
- உதாரணமாக, நீங்கள் செய்யும் Group Chat மற்றும் Personal Chat இவை இரண்டையும் WhatsApp Favorites அம்சத்திற்குள் கொண்டு வர முடியும். உங்களின் விருப்பத்திற்கமைய அதனை மறுவரிசைப்படுத்தவும் முடியும்.
WhatsApp Favorites அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?
- உங்களுடைய WhatsApp-ல் உள்ள Favorite List அதில் ஒரு Contact அல்லது ஒரு group சேர்க்க சாட் ஸ்க்ரீனில் உள்ள 'Favorite' என்கிற Favorites Filter தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்படி செய்து வைத்தால் பொதுவாக எல்லாவற்றையும் ஒன்றாக பார்க்காமல் உங்களுக்கு தேவையான சாட்களை மாத்திரம் Favorite List -க்குள் பார்க்கலாம்.
- மேலும் விருப்பமான Chat -களை Add Favorite என்கிற ஆப்ஷனை டேப் செய்து வைத்தால் அது தனியாக இருக்கும்.
- இந்த புதிய அம்சம் சாட்களை 'பின்' செய்து வைக்கும் வேலையை குறைக்கிறது.
Context Card அம்சம்
சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் நிறுவனம் Context Card என்ற புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளது.
இதனை அறிமுகம் செய்ததற்கான நோக்கம் ஒரு க்ரூப்பை பற்றிய அனைத்து வகையான தகவல்களை அறிந்து கொள்வதற்காக மாத்திரமே. இதனால் போலியான WhatsApp க்ரூப்களினால் ஏற்படும் மோசடிகள் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |