செய்திகள் வாசிப்பதற்கு கூட கட்டணம் வேண்டும்! அதிரடியாக பயனர்களுக்கு எலன் மஸ்க் கொடுத்த அறிவிப்பு
டுவிட்டரில் செய்திகள் வாசிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு கட்டணம் அளவிடப்படும் என எலன் மஸ்க் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.
எலன் மஸ்க்கின் விறுவிறுப்பான அப்டேட்கள்
மிகவும் வேகமாக செய்திகளை பரிமாற்றும் செயலியாக செயற்படும் வரும் செயலி தான் டுவிட்டர்.
இந்த செயலியை கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பல இன்னல்களுக்கு மத்தியில் எலன் மஸ்க் என்பவர் வாங்கியுள்ளார். இவர் பொறுப்பேற்ற காலப்பகுதியிலிருந்து டுவிட்டரில் பல மாற்றங்கள் செய்து வருகிறார்.
இவரின் புதிய அப்டேட்கள், புதிய செய்திகள் என பல விடயங்களை செய்து வருகிறார். அந்தவகையில் டுவிட்டரில் செய்திகளை படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு கட்டணம் அளவிடப்படும் என ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
செய்திகள் வாசிப்பதற்கு கூட கட்டணமா?
அதில்,“ அடுத்த மாதம் முதல் டுவிட்டர் தளம் செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "மாதாந்திர சந்தாவிற்கு பதிவு செய்யாத பயனர்கள் அவ்வப்போது கட்டுரையைப் படிக்க விரும்பும்போது அந்த ஒரு கட்டுரைக்கு அதிக விலையை செலுத்த வேண்டும்.
இந்த முறைமை செய்தி நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த டுவிட்டர் பயனர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.
Image - Fox Business