எலான் மஸ்க் பதவி விலக வேண்டுமா...! டுவிட்டரில் கருத்துக்கணிப்பு
நான் டுவிட்டர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்ற கருத்துக்கணிப்பை தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்காண மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
அந்நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து இவரின் பெயர் அடிப்பட்டு வந்தது.
பதவி விலக வேண்டுமா?
Should I step down as head of Twitter? I will abide by the results of this poll.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
எலான் மஸ்க் சமூக ஊடகத் தளத்தில் கருத்துக் கணிப்பை ஆரம்பித்தார். அவர் அந்நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா எனக் கேட்டது மட்டுமின்றி, மேலும் கருத்துக் கணிப்பு முடிவுகளுக்குக் தான் கட்டுப்படுவேன் என்றும் கூறினார்.
குறித்தக் கருத்துக்கணிப்பில் 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் 'ஆம்' என்றும் சுமார் 42.4 சதவீதம் பேர் 'இல்லை' என்பதை தெரிவித்துள்ளனர்.
வாக்கெடுப்பு இன்று 11:20க்கு முடிவடையும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மஸ்க் பதவி விலக வேண்டும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறினால், அவர் எப்போது பதவி விலகுவார் என்ற விவரங்கள் இன்னும் உறுதியாக தெரியவில்லை.
மேலும், வாக்கெடுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மஸ்க் மன்னிப்புக் கேட்டு, "முன்னோக்கிச் செல்லும்போது, முக்கியமான கொள்கை மாற்றங்களுக்கான வாக்கெடுப்பு இருக்கும். என டுவீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.