எச்சரிக்கை பதிவு : தவறியும் இந்த 4 விடயங்களை கூகுளில் தேடாதிங்க... சிறைதண்டனை உறுதி!
பொதுவாகவே தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கையடக்கத் தொலைபேசியில் இணையத்தை சாதாரணமான பயன்படுத்துகின்றனர்.
இணையத்தில் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்று நன்மையும் இருக்கின்றது அதற்கு நிகராக தீமையும் இருக்கின்றது.
ஆனால் பகுத்தறிவு படைத்த மனிதர்களாகிய நாம் அதைனை புரிந்து இணையத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். மேலும் சிறுவர்கள் இணைத்தை பயன்படுத்தும் போது பெரியோரின் மேற்பார்வையில் இருப்பதை உறுதிசெய்தல் அவசியம்.
கூகுளின் எச்சரிக்கை அறிக்கையின் பிரகாரம் ஒரு போதும் கூகுளில் தேடவே கூடாத முக்கிய நான்கு விடயங்கள் குறித்து இந்த பாதிவில் தெரிந்துக்கொள்ளலாம். மீறியும் இந்த விடயங்களை தேடினால் நீங்கள் கைது செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இணையத்தில் தேடக் கூடாத விடயங்கள்
வெடிகுண்டை எப்படி தயாரிப்பது என்று தேடாதீர்கள்:
வெடிகுண்டு அல்லது வேறு எந்த வகையான ஆயுதத்தையும் தயாரிப்பது தொடர்பில் இணையத்தில் தேடுவத மிகவும் ஆபத்தானதாகும். தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இந்த வகையான தேடல்களை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர். எனவே இது போன்ற தகவல்களை பெற முயல்வது, சிவப்பு சமிக்ஞையை உருவாக்கக்கூடும். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் இதை சந்தேகத்திற்கிடமான நடத்தையாகக் கருதி கைது செய்யவும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
மின்னணு சாதனங்களை ஹேக் செய்வதற்கான வழிகளை ஒருபோதும் தேடாதீர்கள்:
எந்தவொரு மின்னணு சாதனத்தையும் ஹேக் செய்வது எப்படி", "கடவுச்சொற்களை ஹேக் செய்வது எப்படி" என்று கூகிளில் தேடிவது சட்டவிரோதமானது. அல்லது ஹேக்கிங் கருவிகளைப் பெற முயற்சித்தால் சைபர் கிரைம் பிரிவு உங்களைக் கண்டறிந்து கைது செய்ய அதிகாரம் கொண்டுள்ளது.
ஹேக் செய்வதற்கான வழிகளை இணையத்தில் எவ்வாறு செய்யப்படுகிறது என்று நீங்கள் தேடினால், காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்படலாம், ஏனெனில் அது உங்களை சந்தேகத்திற்குரியவராகக் காட்டக்கூடும். ஹேக் செய்வதில் சிக்கினால் நீங்கள் கைது செய்யப்படடும் வாய்ப்பு அதிகம்.
திருட்டுத்தனமான திரைப்படங்களை ஒருபோதும் தேடாதீர்கள்:
கூகிளில் இலவச திரைப்படங்களைத் தேடுவதன் மூலம், பலர் OTT சந்தாக்கள் அல்லது திரைப்பட டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்கம் முயற்ச்சியில் ஈடுப்படுகின்றார்கள் கூகுளின் எச்சரிக்கை பிரகாரம் இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தியாவின் பதிப்புரிமை விதிகள் திருட்டு உள்ளடக்கத்தைப் பதிவிறக்குவது அல்லது ஸ்ட்ரீம் செய்வது சட்டவிரோதமானது. இவ்வாறு தேடலில் ஈடுப்பட்டால் சிறை தண்டனை உறுதி.
குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்க்க கூகிளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்:
குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் பார்ப்பது மற்றும் தயாரிப்பது போக்சோ சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மேலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பற்றி கூகிளில் தேடுவது ஒரு பெரிய குற்றமாகும். உலகின் பிற பகுதிகளைப் போலவே, இந்தியாவிலும், இதுபோன்ற தேடல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அது தண்டனைக்குரிய குற்றம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |