சாஸ்த்திரம்: நவராத்திரி பூஜையில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க- பலன் கிடைக்காது
நவராத்திரி பண்டிகையின் போது ஒரு சில தவறுகைளை மறந்தும் செய்யக் கூடாது என சாஸ்த்திரம் சொல்கின்றது.
மஹாலய அமாவாசைக்கு அடுத்த பிரதமை திதியில் ஆரம்பமாகும் நவராத்திரி பூஜை தொடர்ந்து 9 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு அக்டோபர் 3ம் திகதி முதல் நவராத்திரி பூஜை ஆரம்பமாகவுள்ளது.
அந்த சமயத்தில் சிலர் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்துவார்கள். சிவனுக்கு உகந்த நாள் சிவராத்திரி என்றால், அம்பிகையை வழிபாட்டிற்கு உகந்த நாளாக நவராத்திரி பூஜை பார்க்கப்படுகின்றது. நவம் என்பது எண் 9 குறிக்கின்றது.
இதன்படி, அம்மனை 9 ராத்திரிகள் வழிபடுவதாலும், மலைமகள், அலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியராகிய அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்ய 9 நாட்கள் தவம் இருந்ததாலும் நவராத்திரியை 9 நாட்கள் கொண்டாடுகின்றனர்.
இப்படி பக்தியுடன் கொண்டாடப்படும் பூஜையில் ஏதாவது தவறுகள் செய்தால் அதன் பலனை அடைய முடியாது என சாஸ்த்திரம் சொல்கின்றது. பூஜையின் போது அடிக்கடி எழுந்து செல்வது ஒரு பொதுவான தவறு. இது அவமரியாதையாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில், நவராத்திரியில் செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நவராத்திரியில் செய்யக்கூடாத தவறுகள்
1. துளசி அல்லது அருகம்புல்லை பூஜைக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் அவை தேவி துர்கைக்கு உகந்ததல்ல.
2. எருக்கஞ்செடி மலர்களை எக்காரணம் கொண்டும் பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது. மாறாக சிவப்பு அல்லது மஞ்சள் நிற மலர்களை மாத்திரம் தான் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். இந்த நிற பூக்கள் துர்கை தேவிக்கு பிடித்தமானவையாக பார்க்கப்படுகின்றது.
3. துர்கா தேவிக்கு உகந்த மந்திரங்களை மாத்திரம் தான் பூஜையின் போது உச்சரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பூஜையின் பலன் கிடைக்காது.
4. பிரார்த்தனை செய்யும் இடத்தை கால்களால் மிதிக்கக் கூடாது. எப்போதும் உங்கள் கைகளைப் பயன்படுத்தி உரிய வேலைகளை செய்ய வேண்டும். 5. நவராத்திரி காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனின் அவை மந்தமான உணர்வை கொண்டு வரும்.
6. பூஜை நேரங்களை தவிர்த்து வீடுகளில் இருக்கும் பொழுதும் சுத்தத்தை பேண வேண்டும். அத்துடன் பூஜை இடம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
7. புனிதமான நேரத்தில் எந்தவிதமான சண்டை சச்சரவுகள் அல்லது எதிர்மறை எண்ணங்களை வைத்து கொள்ள வேண்டாம். இது பூஜையின் பலனை அடைய விடாமல் தடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |