நவராத்திரிக்கு வீட்டில் கொலு வைக்க போறீங்களா? எந்த படியில் எந்த பொம்மை வைக்கலாம்
நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைக்கும் முறை, கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நவராத்திரி
மஹாலய அமாவாசைக்கு அடுத்த பிரதமை திதியில் ஆரம்பமாகும் நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
இந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதியிலிருந்து நவராத்திரி ஆரம்பமாகின்றது. நவராத்திரியின் போது கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவது வழக்கமாகும்.
சிவனுக்கு உகந்த நாள் சிவராத்திரி என்றால், அம்பிகையை வழிபடுவதற்கு நவராத்திரி உகந்த நாட்களாக அறியப்படுகிறது.
நவம் என்றால் 9 என்று பொருள். அம்மனை 9 ராத்திரிகள் வழிபடுவதாலும், மலைமகள், அலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியராகிய அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்ய 9 நாட்கள் தவம் இருந்ததாலும் நவராத்திரியை 9 நாட்கள் கொண்டாடுகின்றனர்.
எந்தெந்த படிகளில் எந்தெந்த பொம்மைகள்?
9 படிகள் அமைத்து அதில் ஒவ்வொரு படிகளிலும், ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு என்று புராணங்களில் கூறப்பட்டதைப் போன்று அதற்கேற்ப படிகளில் வைப்பார்கள்.
முதல் படி: ஓரரிவு உயிரினங்களான மரம், செடி, கொடி வைக்கப்படுகின்றது.
இரண்டாவது படி: நத்தை, சங்கு உள்ளிட்டவை இரண்டாவது படியிலும் வைக்க வேண்டும்.
மூன்றாவது படி : கரையான் உள்ளிட்ட உள்ளிட்ட மூன்று அறிவு உயிரினங்களை வைக்கவும்.
நான்காம் படி : நான்கு அறிவு ஜீவன்களான நண்டு உள்ளிட்ட ஜீவன்களை வைக்க வேண்டும்.
ஐந்தாம் படி: பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட 5 அறிவு கொண்ட உயிரினங்களை வைக்கலாம்.
ஆறாம் படி : ஆறு அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள் வைக்கப்படுகின்றது.
ஏழாவது படி : மனிதர்களாக வாழ்ந்து மகான்களாகவும், ஞானிகளாகவும் உயர்ந்தவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். விவேகானந்தர், வள்ளலார் உள்ளிட்டவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.
எட்டாவது படி : தசாவதாரம், அஷ்டலட்சுமி அவதார பொம்மைகளை எட்டாவது படியில் வைக்கவும்.
ஒன்பதாவது படி : முப்பெரும் தேவியரின் உருவங்கள், மும்மூர்த்திகள் மற்றும் பூரண கலசத்தை வைத்து வழிபடலாம்.
இவ்வாறு ஒன்பது நாட்களும் கொழு வைத்து விரதம் இருந்து அம்பாளை வழிபட்டால் முப்பெரம் தேவியின் அருள் கிடைப்பதுடன், திருமணமானவர்களக்கு மாங்கல்ய பாக்கியம் பெருகுவதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்று நம்பப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |