வீட்டு பூஜை அறையில் செய்யத்தகாத தவறுகள்.. வறுமையை கொண்டு வரும்- அவசியம் தெரிஞ்சிக்கோங்க
நாம் இருக்கும் வீடு வாஸ்துப்படி அமைக்கப்பட்டிருந்தால் அந்த வீட்டில் நேர்மறையான ஆற்றல்கள் அதிகமாக இருக்கும். அதே சமயம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி வீடு முழுவதும் நிரம்பியிருக்கும்.
இந்து சமயத்தை பின்பற்றும் வீடுகளில் உள்ளவர்கள் வாஸ்து மற்றும் சாஸ்த்திரத்தில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள். அத்துடன் தெய்வ வழிபாடுகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
நமது வீடுகளில் முக்கிய அறையாக பார்க்கப்படும் பூஜை அறையில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளைகளில் தெய்வங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி வழிபாடு செய்யும் பொழுது வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றல்கள் வெளியேறும்.
அந்த வகையில், வீட்டில் உள்ள பூஜை அறையில் செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
செய்யக்கூடாத தவறுகள்
1. வாஸ்துப்படி ஒரு வீட்டின் பூஜை அறையானது சரியான திசையில் அமைந்திருக்க வேண்டும். தவறான திசையில் அமைத்தால் வீட்டில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். இதன்படி, ஒரு வீட்டில் பூஜை அறையானது வடகிழக்கு பகுதியான ஈசான மூலையில் இருக்க வேண்டும். அத்துடன் பூஜை அறையானது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். தெற்கு மற்றும் மேற்கு திசையை நோக்கி பூஜை அறையை அமைக்கக் கூடாது.
2. பூஜை அறையில் வைக்கும் தெய்வங்களின் சிலைகளில் கவனம் செலுத்த வேண்டும். தெய்வங்களின் வழிபாட்டில் சிலைகள் வைக்கக் கூடாது. அப்படி இருப்பின் தெய்வங்களின் கோபம் கண்டிப்பாக வந்து சேரும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்பி, வீட்டில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
3. வீட்டின் பூஜை அறையை எப்போதும் சரியான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். சிலர் வீட்டின் மாடிப்படிக்கு அடியில் அல்லது கழிவறை அல்லது குளியலறைக்கு அருகில் அமைப்பார்கள். இது செய்யக் கூடாத தவறுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வீட்டின் நேர்மறையான ஆற்றல்கள் அதிகமாக இருக்க வேண்டும். அதனை சரியான இடத்தில் அமைக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |