sunday special: நேபாளி பாணியில் அசத்தல் சுவையில் சிக்கன் குழம்பு... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே ஓய்வு நாட்களில் நாவூக்கு ருசியாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவார்கள்.
குறிப்பாக அசைவ பிரியர்களின் விருப்பட்டியலில் சிக்கன் முக்கிய இடத்தை பிடித்து விடுகின்றது. பெரும்பாலும் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சிக்கன் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில் இந்த சன்டே ஸ்பெஷலாக சிக்கன் குழம்பை எப்போதும் போல் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் நேபாளி பாணியில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைப்பதற்கு
சீரகம் - 1 மேசைக்கரண்டி
மல்லி - 2 மேசைக்கரண்டி
மிளகு - 15
ஏலக்காய் -4
கிராம்பு - 6
வரமிளகாய் - 12
பூண்டு - 12 பல்
இஞ்சி - 2-3 இன்ச்
மஞ்சள் தூள் - 3/4 மேசைக்கரண்டி
ஷஉப்பு - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
தாளிப்பதற்கு தேவையானவை
கடுகு எண்ணெய் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
சிக்கன் - 1 கிலோ
கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
தண்ணீர் - 100 மிலி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, மிளகு, ஏலக்காய், கிராம்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரையில் நன்றாக வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கி, அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மென்மையாக வதக்கி, பின்னர், கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பத்து நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் அரை கைப்பிடியளவு கொத்தமல்லியைத் தூவி, 100 மிலி தண்ணீர் ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் சிக்கனை நன்றாக வேகவிட்டு இறக்கினால், சுவையான நேபாளி ஸ்டைல் சிக்கன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |