உங்க முடி பிரச்சினைக்கு நெல்லிக்காய் மட்டும் போதும்...
பொதுவாகவே நெல்லிக்காயில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
நெல்லிக்காய் முடிக்கும் நிறைய நன்மையளிக்கின்றது இந்த நெல்லிக்காயைக் கொண்டு முடி பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காணலாம் அதற்கு வீட்டில் இப்படி செய்து பயன்படுத்திப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
தயிர் - 1/2 கப்
நெல்லிக்காய் பவுடர் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலைப் பொடி - 1 மேசைக்கரண்டி
வெந்தயப் பொடி - 1 மேசைக்கரண்டி
image - navbharat times
செய்முறை
தயிர், வெந்தயப் பொடி, நெல்லிக்காய் பவுடர் என்பவற்றை பேஸ்ட் போல் செய்து தலையில் தடவி, அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
அதன்பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முடியை அலச வேண்டும். ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், அரைமணி நேரத்துக்கு மேல் ஊறவைக்கக்கூடாது.
image - onlymyhealth
பலன்கள்
நெல்லிக்காயானது, தலைப்பகுதியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இளநரையைப் போக்கும்.
முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
தலைமுடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
தலைப்பகுதியின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
பொடுகு, உச்சந்தலை அரிப்பு என்பவற்றை தடுக்கும்.