அசத்தலான சுவையில் நெய் பொடி கோழி வறுவல்... எப்படி செய்வது?
பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்கும் மிகவும் பிடித்த விடயமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் பொரும்பாலானவர்களுக்கு சொல்லும் போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
நீங்கள் அசைவ பிரியர்களா? அப்போ இந்த வார கடைசில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். அவ்வளவு சுவையான நெய் சிக்கன் வறுவலை மாதம்பட்டி ரெங்கராஜின் பாணியில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு தேவையானவை
சிக்கன் - 1/2 கிலோ
முட்டை - 1
அரிசி மாவு - 1 தே.கரண்டி
சோள மாவு - 1 தே.கரண்டி
கடலை மாவு - 1 தே.கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
சீரகத் தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
தயிர் - 2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வறுவலுக்கு தேவையானவை
நெய் - 2 தே.கரண்டி
வெங்காயம் - 2(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
கறிவேப்பலை - சிறிது
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
இட்லி பொடி - 1 1/2 தே.கரண்டி
நெய் - 2 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களான முட்டை, அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், தயிர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்றாக பிரட்டி எடுத்து 15 நிமிடங்கள் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிக்கனை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை சேர்த்து முக்கால்வாசி வேக வைத்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து உருகியதும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து உப்பு தூவி தக்காளி மென்மையாகும் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்னர் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, பின் இட்லி பொடி மற்றும் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு 2 நிமிடம் வரையில் நன்றாக கிளறி விட வேண்டும்.
இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான நெய் பொடி கோழி வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |