செட்டிநாடு சுவையில் மட்டன் கொத்து கறி எப்படி செய்வது?
அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் நபர்களுக்கு செட்டிநாடு சுவையில் மட்டன் கொத்து கறி எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இன்று பெரும்பாலான நபர்க்ள் அசைவ உணவையே விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அதிலும் மட்டன் என்றால் அதற்கென்று தனி கூட்டமே இருக்கின்றது.
மட்டன் கொத்து கறி செட்டிநாடு ஸ்டைலில் சமைத்து வைத்தால், சாதத்திற்கு மட்டுமல்ல இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவற்றிற்கும் சுவை அட்டகாசமாகவே இருக்கும்.
தற்போது செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் கொத்து கறி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் கொத்துக்கறி - 300 கிராம்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
பிரியாணி இலை - 1
அன்னாசிப்பூ - 1
கல்பாசி - 1 துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் வெட்டியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து பொடி செய்வதற்கு...
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
வரமிளகாய் - 6
செய்முறை
முதலில் மட்டம் கொத்துக்கறியை நன்றாக கழுவிக் கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து மல்லி, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரின் மூலம் பொடி செய்து கொள்ளவும்.
பின்பு குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, சோம்பு, கல்பாசி சேர்த்து தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளியை சேர்த்து வதக்கி, பின்பு மட்டனை சேர்க்கவும். அதற்கு தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டிவிடவும்.
குறைவான தீயில் வைத்து 10 நிமிட வேக வைத்து இறக்கவும். பின்பு குக்கரை திறந்து, அடுப்பில் வைத்து தீயை அதிகமாக வைத்து, கிரேவியை கிளறிவிடவும்.
கடைசியாக அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன் கொத்துக்கறி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |