ஆரோக்கியம் நிறைந்த சுரைக்காய் கடையல்... இப்படி செய்து பாருங்க
உடலுக்கு பல்வேறு நலம் பயக்க்கூடிய காய் தான் சுரைக்காய் . உடலில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் எடை குறைப்பு உட்பட பல்வேறு நோய்களுக்கும் தீர்வு கொடுக்கும்.
இதனை பச்சையாக சாப்பிடுவதை விடவும் சமைத்து சாப்பிடுவது மிகவும் நிறந்தது. சுரைக்காயை வெறும்வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது நலம்.
இத்தனை மருத்துவ குணங்களை கொண்டுட சுரைக்காயை கொண்டு வித்தியாசமான முறையில் சுவை நிறைந்த கடையல் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிஞ்சு சுரைக்காய் - 1
எண்ணெய் - 3 தே.கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
பூண்டு - 7-8 பல்
பெரிய வெங்காயம் - 1
வரமிளகாய் - 4 (உடைத்து விதைகளை நீக்கியது)
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 1/2 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் சுரைக்காயை சுத்தம் செய்து தோலை நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானது, கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 3-4 நிமிடங்களுக்கு நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் சுரைக்காயை சேர்த்து கிளறிவிட்டு தேவையான அளவு நீரை சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
கொஞ்ம் ஆறவிட்டு குக்கரை திறந்து. மத்து கொண்டு கடைந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆரோக்கியம் நிறைந்த சுரைக்காய் கடையல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |