Neeya Naana: செய்யாத இட்லிக்கு இத்தனை இட்லி சட்டியா? அரங்கத்தில் வருத்தப்பட்ட கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் பாத்திரங்கள் மேல் ஆசை வைக்கும் குடும்ப தலைவிகள் மற்றும் அதை விமர்சிக்கும் குடும்பத்தார் என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் பாத்திரங்கள் மேல் ஆசை வைக்கும் குடும்ப தலைவிகள் மற்றும் அதை விமர்சிக்கும் குடும்பத்தார் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கலந்து கொண்டுள்ளவர்கள் பாத்திர கடையை அவதானித்தால் சந்திரமுகியாக மாறிவிடுவதாக பெண் கூறியுள்ளார்.
அவரது கணவர் மனைவி தூங்கிய பின்பு தெரியாமல் அவர் வைத்திருக்கும் பாத்திரத்துடன் நீயா நானா அரங்கத்திற்கு வந்துள்ளார்..
மேலும் பலரும் தங்களது பாரம்பரிய பாத்திரங்களை கொண்டு வந்து அசத்தியுள்ளனர். பெண் ஒருவர் தனது மன அழுத்தத்தை குறைப்பதற்கு அவ்வாறு செய்வதாக கூறியுள்ளார்.
மற்றொரு பெண் பத்துக்கும் மேற்பட்ட இட்லி சட்டியினை வைத்துள்ளார். ஆனால் அவர் மாவு கூட கடையில் தான் வாங்குவதாகவும், வெளியில் இருந்து வருபவர்களுக்கு இதில் ஒன்றும் செய்து கொடுப்பதில்லை என உண்மையை உடைத்துள்ளார். செய்யாத இட்லிக்கு இத்தனை இட்லி சட்டியா என பாடல் பாடி தெறிக்கவிட்டுள்ளார்.
பயணத்திற்கு பயன்படுத்தப்படும் பாரம்பரிய பாத்திர தொகுப்பை பார்த்த கோபிநாத் அப்படியே ஆடிப்போயுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |