காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்குதா?
பொதுவாக நமது உடல் உறுப்புகளின் அமைப்பு மற்றும் வடிவத்தை கொண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கணிக்க முடியும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் உலகில் பலருக்கு சாதாரணமாக கால் பெருவிரலை விடவும் அதற்கு அடுத்தவிரல் சற்று நீளம் குறைந்ததாகவோா அல்லது சமனாகவோ இருக்கும்.
ஆனால் ஒரு சிலருக்கு அரிதாக பெருவிரலை விடவும் இரண்டாவது கால் விரல் நீளமாக இருப்பது சிறப்பு வாந்ததாக பார்க்கப்டுகின்றது.
இப்படியான விரல் அமைப்பை கொண்டவர்களுக்கு என்னென்ன அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிஷ்ட பலன்களும் சிறப்பு குணங்களும்
பெருவிரலுக்கு அருகில் உள்ள விரல் வித்தியாசமாக நீண்டு காணப்படுபவர்கள் வித்தியாசமான வாழ்க்கை முறையைக் கொண்டுடிருப்பார்கள் என வேத நூல்களும் சாஸ்திரங்களும் குறிப்பிடுகின்றன.
ஜோதிட நிபுணர்களின் கருத்துப்படி ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டைவிரலுக்கு மிக அருகில் உள்ள விரல் ஜோடிகளில் மிகப்பெரியதாக இருந்தால், அவர்கள் பிறப்பிலேயே மிகப்பெரும் ராஜயோகம் கொண்டவர்கள்.
இவர்களிடம் அபரிமிதமான வசீகரத்தன்மை இருக்கும். இவர்கள் மற்ற நபர்கள் உட்பட பணத்தையும் செல்வத்தையும் தன்வசப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஒரு பெண்ணின் இரண்டாவது விரல் பெரிதாக இருந்தால், அவள் தன் கணவனை மிகவும் நேசிக்கின்ற பெண்ணாகவும் கணவனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவளாகவும் இருப்பாள். இத்தகைய பெண்கள் கணவனுக்கு அதிர்ஷ்ட தேவதையாக இருப்பார்கள்.
இப்படி நீளமான விரல் அமைப்பை கொண்ட பெண்கள் அதிக கோபகாரியாக வெளிப்புறத்தில் தோற்றமளித்தாலும் மனதளவில் மிகவும் அமைதியானவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருப்பார்கள்.
இப்படியான விரல் அமைப்பை கொண்ட ஆண்களும், பெண்களும் சிறந்த தலைமைத்துவ பண்புகளையும் நிதி முகாமைத்துவ ஆற்றலையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மென்மையான இதயங்களைக் கொண்டவர்கள், யாராவது கசப்பான ஒன்றைச் சொன்னால் அதை இறக்கும் வரையில் மனதில் வைத்திருக்கும் குணத்தையும் கொண்டிருப்பார்கள். இவர்கள் 35 வயதுக்கு பின்னர் ஆடம்பர வாழ்க்கையை வாழும் யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
[JBO2XNG ]
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |