கண்ணீரில் மூழ்கிய நீயா நானா அரங்கம்... மாமியார் மருமகளிடையே நடந்தது என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மருமகள் மற்றும் மாமியார் நாத்தனார் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு மருமகள் மற்றும் மாமியார் நாத்தனார் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் மருமகளாக இருக்கும் பெண்கள் தனது நாத்தனார் வந்தால் பேய் வருவது போன்று நினைப்பதாக கூறியுள்ளனர். மற்றொரு காட்சியில் மாமியார் மற்றும் நாத்தனார் பேசிவதை எதிரே இருக்கும் மருமகள் மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார்.
அம்மாவிற்கு மேலாக மாமியாரை வைத்து பார்க்க நினைக்கும் மருமகள்கள் கண்ணீர் மல்க அரங்கத்தில் கூறியதைக் கேட்ட மாமியார்களும் கண்ணீர் வடித்துள்ளனர்.
5 வருடமாக பேசாமல் இருக்கும் மருமகளிடம் நாத்தனார் ஒருவர் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு கோபிநாத் குறித்த பெண்ணிடம் பதிலை எதிர்பார்த்துள்ளார்.