பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோ... யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 போட்டி விரைவில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் போட்டியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது.
சீசன் 6 முடிந்து சீசன் 7க்காக காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளனர். பிக்பாஸ் 7வது சீசன் அடுத்த மாதம் அதாவது ஜுலை 2வது அல்லது 4வது வாரத்தில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆரம்பமாகவிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமடையவேண்டும் என்று எண்ணத்தில் பலர் கலந்துக் கொண்டு மக்களின் மனதில் நின்றவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி பிரபலம் ஆகவேண்டும் என்று பல சின்னத்திரை மற்றும் திரைப் பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளனர். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கதிர் என்கிற குமரன் செல்லவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |