திருமணம் வரை மணப்பெண் யாரென தெரியாமல் இருந்த மாப்பிள்ளை.. நீயா நானாவில் உடைக்கப்பட்ட உண்மை!
திருமணம் முடியும் வரை மணப்பெண் யாரென தெரியாமல் இருந்த மாப்பிள்ளையின் கதை நீயா நானாவை விறுவிறுப்பாக்கியுள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
மணப்பெண்ணின் பெயரை மாற்றிய மாப்பிள்ளை
இந்த நிலையில் நீயா நானாவில், இரட்டையர்களாக இருப்பவர்கள் திருமணத்திற்கு பின்னர் அனுபவிக்கும் சுவாரஸ்யங்கள் பற்றி வாதிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒருவர், திருமணம் முடியும் வரை பெண்ணின் தங்கை தான் மணப்பெண் என நினைத்து கொண்டிருந்தார்.
அத்துடன் மணப்பெண்ணின் பெயரும் அவரின் இரட்டை சகோதரியின் பெயரும் ஒரு மாதிரி இருந்த காரணத்தினால் மாப்பிள்ளை முதல் மாமியார் வரை குழப்பம் அடைந்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து இன்னொரு ஜோடி, திருமணத்தின் போது தம்பியை மாப்பிள்ளையாக நினைத்து அவரிடம் கதைக்க சென்றுள்ளாராம்.
அப்போது, பயந்த தம்பி, “ அண்ணி நா தம்பி ” என மணப்பெண்ணை சுதாரித்துள்ளார். இது போன்று இந்த வாரம் நீயா நானாவில் பல சுவாரஸ்யங்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |