வார விடுமுறைக்கு மனைவியுடன் இருக்க விருப்பமில்லை! ஓபனாக மனதில் இருப்பதை உடைத்த கணவர்
கிழமை நாட்களை விட வார இறுதி நாட்களில் என்னால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாது என நீயா நானாவில் இளைஞர் ஒருவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் - மனைவி வாழ்க்கை
பொதுவாக குடும்ப வாழ்க்கை என்று பார்க்கும் போது அதில் கணவன் - மனைவி என இருவருக்கும் பங்கு இருக்கிறது.
இதனை தவறும் பட்சத்தில் நிறைய குளறுப்படிகள் ஏற்பட்டு அது இறுதியாக பாரிய சண்டையாக போய் முடிகிறது.
அந்த வகையில் திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் விடுமுறை நாட்களை கடப்பது குறைவு என பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானாவில் இளைஞரொருவர் கூறியுள்ளார்.
மனைவியுடன் இருக்க விருப்பம் இல்லை
மேலும் பிரபல பேச்சாளர் தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் உண்மை தன்மையை உணர்த்துவதற்காக சமூகத்தில் இருக்கும் தீர்க்க முடியாத பிரச்சினைகளை பட்டிமன்றம் போல் எடுத்து பேசுவார்கள்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முன்னர் கணவர்மார்கள் தன்னுடைய மனைவி அல்லது காதலியை இம்பரஸ் செய்வதற்காக அடிகடி வெளியில் அழைத்து செல்வார்கள்.
ஆனால் திருமணம் ஆன பின்னர் விடுமுறை நாட்களில் வீட்டில் இருப்பது கூட இல்லை என நீயா நானாவில் முறைப்பாடு ஒன்று முன்வைக்கபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்குள்ள கணவரொருவர் நான் விடுமுறை ஏன் வருகிறது என யோசித்துள்ளேன் என மனைவி முன் ஓபனாக ஒப்பு கொண்டுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பகிரப்பட்டுள்ளது.