மனைவி, குழந்தைகளுடன் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ஜிபி முத்து...ட்ரெண்டாகும் வீட்டு விஷேசம்!
பிக் பாஸ் புகழ் ஜிபி முத்து அவரின் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் வீடியோவை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றது.
பிக் பாஸ் வீட்டில் மன அழுத்தத்தில் இருந்த ஜிபி முத்து குடும்பத்தினை பார்க்க வேண்டும் என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டார்.
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ஜிபி முத்து
பணத்தை விட குழந்தைகள் தான் முக்கியம் என கூறி அனைவரிடமும் விடைபெற்று வந்தார்.
பின்பு தன்னுடைய வீட்டுக்கு சென்று குழந்தைகளை பார்த்து அவர்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தற்போது குடும்பத்துடன் மிகவும் எளிமையாக, மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.