ஆண் நண்பர்களை கிழித்து தொங்க விட்ட பெண்கள்! நீயா நானாவில் அரங்கேறிய காரசாரமான வாதம் - ஆனால்..
நண்பர்களாக பழகும் போது அதிகமாக அக்கறை காட்டும் ஆண்கள், தங்கள் பக்கம் இருக்கின்ற நியாயங்களை நீயா நானாவில் புட்டு புட்டு வைத்துள்ளார்கள்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஷோக்களில் ஒன்று நீயா நானா.
இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் பேச முடியாத அல்லது கேட்கப்பட வேண்டிய விடயங்கள் இரண்டு குழுக்களாக பிரித்து வாதாடுவார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சி பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குவதால் மக்கள் மத்தியில் நல்ல ரீச் இருக்கின்றது.
இந்த நிலையில் பெண் தோழிகள் மீது அதிக அக்கறை காட்டும் ஆண்கள், அதனை எரிச்சலாக பார்க்கும் பெண்கள் என இரண்டு தரப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்த வகையில் தன்னுடைய தோழிகளை பாதுகாப்பாக பார்த்து கொள்வதற்காக ஒரு குழுவாக செயற்படுகிறோம் என அவர்கள் பேசியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து கொந்தளித்த பெண்கள், “ இப்படியெல்லாம் நடந்து கொள்வது இன்னொரு பெற்றோரை பார்ப்பது போல் இருக்கின்றது..” என பேசியுள்ளார்கள்.
தன்னுடைய தோழிக்கு எந்த விதமான தொந்தரவும் வந்துவிட கூடாது என தன்னாள் வர முடியாத நிலையில் நண்பருடன் அனுப்பி வைப்பார்கள் என கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் கூறினார்.
இந்த விடயத்தை கேட்ட கோபிநாத்திற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இதனால் வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் அதிகப்படியான அக்கறை காட்டும் ஆண்களை பெண்கள் கிழித்து தொங்க விட்டுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |