Neeya Naana: நண்பர்கள் கொடுத்த ரத்தம்... கைகூடிய காதலர்களின் திருமணம்! ஷாக்கான கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் பத்து வருடம் காதலித்து திருமணம் செய்தவர்கள்... எப்படி என ஆச்சரியப்படும் 2K பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு பத்து வருடம் காதலித்து திருமணம் செய்தவர்கள்... எப்படி என ஆச்சரியப்படும் 2K பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண்ணின் தந்தை மண்ணென்ணெய் ஊற்றி எரித்துவிடுவதாக மிரட்டல் விடுத்தும் தனது காதலன் தான் முக்கியம் என்று அத்தருணத்திலேயே வீட்டைவிட்டு வந்துள்ளார்.
பின்பு நண்பர்கள் சிலர் தங்களது ரத்தத்தை தானம் செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து திருமணம் செய்து வைத்துள்ளதாக அரங்கத்தில் கூறியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        