Neeya Naana: இறந்து போன கணவன்.. அவரது தம்பியை திருமணம் செய்து வைத்த மாமியார்
நீயா நானா நிகழ்ச்சியின், ஆதரவற்றோர் இல்லங்களில வளர்ந்தவர்கள் vs அவர்களின் முதல் உறவாய் வந்த வாழ்க்கை துணை என்ற இரு தரப்பினருக்கு இடையிலான கருத்துக்கள் குறித்த விவாதிக்கப்பட்டது.
அதில் பங்கேற்ற பெண்ணிகளின் கதைகள், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கோபிநாத் உட்பட, பார்வையாளர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்ததுள்ளது.
நீயா நானா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் நடத்தப்படும்.
ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகிவரும் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வார நிகழ்ச்சியில், பங்கேற்ற ஒரு பெண்ணின் பேச்சு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த பெண், ஆசிரமத்தில் வளர்ந்து வந்துள்ளார், யாரும் இல்லையே என ஏங்கிய போது திருமணமும் நடந்துள்ளது.
ஆனால் கணவர் ஒன்றரை மாதத்தில் இறந்துவிட சோகத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டாராம்.
ஊர்க்காரர்களும் வாய்க்கு வந்தபடி பேச, மாமியார் துணையாக நின்றுள்ளார்.
இறந்து போன கணவரின் தம்பிக்கே திருமணமும் செய்து வைத்துள்ளார், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்ற கவலையும் வாட்டி வதைக்க, இன்றளவும் மாமியார் துணையாக இருக்கிறாராம்.
நாங்க இருக்கோம் உனக்காக" என ஆறுதலாக மாமியார் பேசுவாராம் என கண்ணீர் மல்க பேசிய போது, கோபிநாத் யார் அந்த மாமியார்? பெயர் என்ன என கேட்டு சண்முகம்மாளுக்கு இந்த பரிசை கொடுங்க என பரிசு கொடுத்து பாராட்டினார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |