Neeya Naana: மருமகள் முன்பு கோபிநாத் கூறிய ஒற்றை வார்த்தை... வெட்கத்தில் மாமியார்
நீயா நானா நிகழ்ச்சியில் காதலை எதிர்க்கும் காதல் திருமணம் செய்த பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் காதலை எதிர்க்கும் காதல் திருமணம் செய்த பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பிள்ளைகளின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தான் எவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்ட கதையை பிள்ளைகளிடம் அவ்வப்போது கூறியுள்ளனர்.
பெண் ஒருவர் தனது தாய் காதலித்த நபரை நினைத்து ஒற்றை பாடலில் மனம்மாறி அவரையே திருமணம் செய்ததை அரங்கத்தில் கூறியுள்ளார்.
மற்றொரு மாமியார் ஒருவர் தனது மருமகளை காதல் திருமணம் செய்ததால் ஏற்றுக்கொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால் மகன் 10 ஆண்டுகளாக தனது மனைவிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
உடனே கோபிநாத் மருமகளை அரங்கத்திற்குள் அழைத்து மாமியார் குறித்த உண்மையை வரவழைத்துள்ளார். அதாவது தனது திருமணத்திற்கு முன்பு தனது வீட்டிற்கு வந்து ஊர்காரர் முன்பு அசிங்கப்படுத்தியதை கூறியுள்ளார்.

இதில் ஹைலெட் என்னவெனில் குறித்த மருமகளை தற்போது மாமியார் மிகவும் நன்றாக பார்த்துக் கொள்கின்றார். ஆதலால் மருமகள் மாமியாரை விட்டுக் கொடுக்க சிறிது தயங்குகின்றார்.
ஆனால் மகனோ தனது திருமணத்தில் தாய் செய்த கொடுமையினை அரங்கத்தில் பளார் என உடைத்துள்ளார். ஆனால் கோபிநாத் குறித்த மாமியாரின் தற்போதைய மாற்றத்தைக் கண்டு நீங்க பெரிய ஆளு ப்ரொ... கலக்குறீங்க என்று கூறியுள்ளார்.
கோபிநாத்தின் இந்த வார்த்தைக் கேட்ட மாமியார் வெட்கத்தில் முகத்தினை மறைத்துக் கொண்டு சிரிக்கின்றார். இந்த அம்மா காதலை எதிர்ப்பதற்கு காரணம் இவரது பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று அவரை அடித்துள்ளனர்.
ஆனால் அவர் அடிவாங்கியதால் பரிதாபப்பட்டு திருமணம் செய்துள்ளார். திருமணமாகி 42 வருடத்தில் அவரிடம் அடி வாங்கி தையல் போடும் அளவிற்கும் சென்றுள்ளார். இதனால் தான் தனது மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் குறித்த மருமகள், மகனைப் பார்த்து கோபிநாத் இவங்க காதல் சூப்பர் காதல் 10 வருடம் கழித்தும் மனைவிக்காக நிற்கிறாப்ல என்று கூறி காதல்ஜோடியை பெருமைப்படுத்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |