பிரியாணி சாப்பிட்ட பின்பு இந்த தவறை செய்றீங்களா? உடலில் பல பிரச்சனை ஏற்படும்
பிரியாணி சாப்பிட்ட பின்பு Coke போன்ற பானங்களை எடுத்துக் கொள்வதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிரியாணி
பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவு என்னவெனில் பிரியாணி ஆகும். பிரியாணிக்கு பொரித்த சிக்கன், தயிர் வெங்காயம் என பல வகைகளில் வைத்து சாப்பிடுவார்கள்.
ஆனால் சாப்பிட்ட பின்பு செரிமானம் ஆவதற்காக குளிர்பானம் வாங்கி பருகுவதை இன்றைய இளைஞர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

டயட் கோக் என்ற பெயரில் நாம் விரும்பி பருகும் பானத்தில், Aspartame என்ற சேர்க்கை சேர்க்கப்பட்டுள்ளது. இவை நார்மல் சர்க்கரையினை விட 200 மடங்கு இனிப்பாக இருக்குமாம்.
ஆதலால் பிரியாணி சாப்பிட்ட பின்பு டயட் கோக் என்ற பெயரில் Coke குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏதாவது ஒருமுறை ஆசைக்காக மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

Diet Coke இனி குடிக்காதீங்க
ஆனால் குறித்த குளிர்பானம் குடலில் கெட்ட பாக்டீரியாக்களை உருவாக்குவதுடன், மீண்டும், மீண்டும் இதனை குடிக்கவும் தூண்டுகின்றது.
மேலும் அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் இதனை சிறிதும் கூட எடுத்துக் கொள்வது கூடாது. செரிமானத்திற்கு நல்லது என்ற பெயரில் விஷத்திற்கு சமமான இந்த குளிர்பானத்தினை குடிப்பதை தவிர்க்கவும்.

பகலில் மட்டுமின்றி தற்போது இரவு 12 மணிக்கு சாலையோர கடைகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது. இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதும் கூட உடம்பிற்கு கெடுதல் ஏற்படும் என்று மருததுவர்கள் கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |