நறுக்கென ஒரு கேள்வி கேட்ட கோபிநாத்: தலைகுனிந்த ஆண் நண்பர்கள்! நீயா நானாவில் பரபரப்பு வாதம்
“ நான் என்னுடைய தோழியை இன்னொரு ஆணுடன் நம்பி அனுப்ப மாட்டேன்” என நீயாநானாவில் ஆண் நண்பர்கள் காரசாரமாக வாதாடியுள்ளார்கள்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஷோக்களில் ஒன்று நீயா நானா.
இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் பேச முடியாத அல்லது கேட்கப்பட வேண்டிய விடயங்கள் இரண்டு குழுக்களாக பிரித்து வாதாடுவார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சி பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குவதால் மக்கள் மத்தியில் நல்ல ரீச் இருக்கின்றது.
இந்த நிலையில் பெண் தோழிகள் மீது அதிக அக்கறை காட்டும் ஆண்கள், அதனை எரிச்சலாக பார்க்கும் பெண்கள் என இரண்டு தரப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அதில், என்னுடைய தோழி பேருந்தில் தனியாக சென்றால் அவருடன் நானும் செல்வேன். ஏனென்றால் தோழியின் பாதுப்பாக மிகவும் அவசியமாகும்.
அத்துடன் “ பேருந்தில் என்னுடைய தோழியின் பக்கத்தில் வேறு எந்த ஆணும் அமரக் கூடாது. அவர்கள் என்னுடைய தோழியின் மேல் கை வைத்து விடுவார்கள்..” என ஆண் நண்பர் ஒருவர் பேசியுள்ளார்.
பதிலில் கொந்தளித்த கோபிநாத்
இதன் பின்னர் கடுப்பான கோபிநாத்... “ இது போல் நீங்களும் ஒரு ஆண் தானே.. அப்போது எப்படி பெண்ணின் அப்பா உங்களுடன் அனுப்புகிறார் என கேட்க, அதற்கு நம்பிக்கை என பதிலளித்தார்கள்.
கோபிநாத்,“ அது உங்கள் மீது கொண்ட நம்பிக்கை மட்டுமல்ல அவரின் பெண்ணின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கை தான்..” என தரமான பதிலடிக் கொடுத்துள்ளார்.
இந்த வாதத்தை பார்க்கும் போது ஆண்களை விட தங்களின் பாதுகாப்பில் பெண்களுக்கு தான் முக்கிய பங்கு இருக்கின்றது என தெளிவாகின்றது.
இந்த செய்தியை படித்த இளைஞர்கள் இனி இது போன்ற காரியங்களில் ஈடுப்பட மாட்டார்கள் என நம்பப்படுகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |