சினிமாவிற்கு கதை எழுதியுள்ள மகன்... கோபிநாத்திடம் உண்மையைக் கூறிய நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் வீட்டிற்கு நீயா நானா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் கோபிநாத் சென்றுள்ள காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் நெப்போலியன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் நெப்போலியன், தீவிர அரசியல்வாதியாகவும் இருந்தார்.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் வந்துவிட்ட நிலையில், சினிமா அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.
ஆரம்பத்தில் மகனின் சிகிச்சைக்கு சென்ற நெப்போலியன் பின்பு, மகனுக்காக அங்கேயே செட்டிலாகியுள்ளார்.

அங்கு சொந்த வீடு, ஐடி கம்பெனி, மிகப்பெரிய விவசாய பண்ணை என அனைத்தையும் பார்த்து வருகின்றார். கடந்த ஆண்டு தனது மூத்த மகனுக்கு அக்ஷயா என்ற பெண்ணுடன் திருமணமும் கோலாகலமாக செய்து வைத்துள்ளார்.
அவ்வப்போது இந்த தம்பதிகளின் புகைப்படம் காணொளிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது.
நெப்போலியன் வீட்டில் கோபிநாத்
இந்நிலையில் தொகுப்பாளர் கோபிநாத் அமெரிக்காவில் நெப்போலியன் வீட்டிற்கு சென்று நலம்விசாரித்துள்ளார்.
இந்த காட்சியினை நெப்போலியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன், Vijay TV புகழ் கோபிநாத் வருகை உலகெங்கும் வாழும் அன்பு நண்பர்களே, நமது தமிழ்ச் சொந்தங்களே வணக்கம்…!
நேற்று Oct 25ஆம் தேதி Nashville-லில் அன்பு நண்பர்கள், ராஜ்குமார் & மகேஷ் அவர்களது Clear Sky நிறுவனம் ஏற்பாடு செய்த அமெரிக்க வாழ்க்கை சுகமா, சுமையா..? என்ற தலைப்பில் , கோபிநாத்துடன் ஒரு விவாத மேடை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது..!
அமெரிக்காவில் இது போன்ற நிகழ்ச்சிக்காக பல்வேறு நகரங்களுக்கு 2 வாரமாக பயணம் செய்துவிட்டு , இந்த நிகழ்வுக்காக நாங்கள் வசிக்கும் Nashville-க்கு வந்தபோது, எங்கள் வீட்டிற்கு அவர் வருகை தந்தது எங்கள் குடும்பத்திற்கு மகிழ்வாகவும், மன நிறைவாகவும் இருந்தது…! மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.
இதில் தனது மகன் சினிமாவிற்கு கதை ஒன்றினை எழுதியுள்ளதாக நெப்போலியன் கூறியுள்ளார். நெப்போலியன் கூறிய இந்த விடயத்தினை அறிந்த ரசிகர்கள், மூத்த மகன் தனுஷா அல்லது இளைய மகன் குணாலா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |